Thursday, December 16, 2010

22. மலையாம் மலையழகாம்

மலையாம் மலையழகாம் ஐயப்போ - சாமியே
மலையை சுத்தி தோப்பழகாம் ஐயப்போ - சாமியே

தேக்கு விளையும் மலை ஐயப்போ - சாமியே
தேனாறு பாயும் மலை ஐயப்போ - சாமியே
                                                                                                                (மலை)
பாக்கு விளையும் மலை ஐயப்போ - சாமியே
பக்தர்கள் கூடும் மலை ஐயப்போ - சாமியே

பம்பை நதி பிறந்த மலை ஐயப்போ - சாமியே
பாவமெலாம் தீரும் மலை ஐயப்போ - சாமியே
                                                                                                                 (மலை)
ஐயப்போ - சுவாமியே
சுவாமியே - ஐயப்போ
                பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
                சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு

தேவனே - தேவியே
தேவியே - தேவனே
                ஈஸ்வரனே - ஈஸ்வரியே
                ஈஸ்வரியே - ஈஸ்வரனே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
                கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
                காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
இருமுடிக்கட்டு - சுவாமிக்கே
சுவாமிக்கே - இருமுடிக்கட்டு
                நெய் அபிஷெகம் - சுவாமிக்கே
                சுவாமிக்கே - நெய் அபிஷெகம்
சுவாமி சரணம் - ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் - சுவாமி சரணம்
                தூக்கிவிடையா - ஏந்திவிடையா
ஏந்திவிடையா - தூக்கிவிடையா
கற்பூரதீபம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - கற்பூரதீபம்
        குன்றும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
        கண்ணுக்கு வெளிச்சம் - குன்றும் குழியும்
வில்லாளிவீரா - வீரமணிகண்டா
வீரமணிகண்டா - வில்லாளிவீரா

மலையாம் மலை கடந்து ஐயப்போ - சாமியே
மகர ஜோதி காண வாரோம் மலை ஐயப்போ - சாமியே
                                                                                                                          (மலை)

ஊக்கம் அளிக்கும் மலை ஐயப்போ - சாமியே
உத்திராட்சம் காய்க்கும் மலை ஐயப்போ - சாமியே

சந்தனம் விளையும் மலை ஐயப்போ - சாமியே
சத்தியம் நிலைக்கும் மலை ஐயப்போ - சாமியே
                                                                                                                    (மலை)

No comments:

Post a Comment