அழைத்திடுவோம் ஸ்வாமி அழைத்திடுவோம்
ஹரிஹரசுதனை அழைத்திடுவோம்
வில்லாளி வீரன் அவன் வீரமணி கண்டன் அவன்
மோஹினி பாலனை அழைத்திடுவோம் - அந்த
மோஹினி பாலனை அழைத்திடுவோம்
---- அழைத்திடுவோம் ஸ்வாமி
2 ( வண்ணமயில் வாகன வடிவேலன்
அவன் தம்பியான சிவபாலன் )2
---- அழைத்திடுவோம் ஸ்வாமி
ஐந்து மலையின் யுவராஜன் - அந்த
சபரியில் வாழும் மகராஜன்
மதகஜ வாகன மாவீரன் - அவன்
மாமலை வாழும் மணிகண்டன்
---- அழைத்திடுவோம் ஸ்வாமி
2 ( வந்திடுவான் அவன் வந்திடுவான்
வன்புலிமேலே வந்திடுவான் )2
---- அழைத்திடுவோம் ஸ்வாமி
அச்சன்கோவில் அரசனவன் - அந்த
ஆரியங்காவு ஐயன் அவன்
குளத்துப்புழையின் பாலனவன் - எங்கள்
குலத்தை காக்கும் தெய்வமவன்
---- அழைத்திடுவோம் ஸ்வாமி
No comments:
Post a Comment