ஓம்கார பொருள் உரைக்கும் ஐயப்பா..........
ஓம்கார ஸ்வரூபன் உன்னை
தரிசனம் காண வழி காட்டும்
சிங்காரத் திருபடிகளே...சரணம் ஐயப்பா...
ஸ்வாமியே...... சரணம் ஐயப்பா
ஒன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் உள்ளம் சிலிர்க்குது ஐயப்பா
இரண்டாம் திருப்படி ஏறி வந்தோம் புது இன்பம் தோன்றுது ஐயப்பா
மூன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் முன் வினை விலகுது ஐயப்பா
நான்காம் திருப்படி ஏறி வந்தோம் தல ஸ்தலங்கள் பெருகுது ஐயப்பா
2 ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2
ஐந்தாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஐங்கரன் தம்பியே ஐயப்பா
ஆறாம் திருப்படி ஏறி வந்தோம் நீ ஆறுதல் தருவாய் ஐயப்பா
ஏழாம் திருப்படி ஏறி வந்தோம் என்றும் ஏழைகள் துணை நீ ஐயப்பா
எட்டாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஏகாந்த ரூபனே ஐயப்பா
2 ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2
ஒன்பதாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஓம்கார பொருளே ஐயப்பா
பத்தாம் திருப்படி ஏறி வந்தோம் பந்த பாசம் அகற்றிடு ஐயப்பா
பதினொன்னாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பந்தள ராஜா ஐயப்பா
பன்னிரண்டாம் திருப்படி ஏறி வந்தோம் உந்தன் பொன்னடி சரணம் ஐயப்பா
2 ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2
பதிமூன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பதியே மிதியே ஐயப்பா
பதினான்காம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பார்வதி பாலா ஐயப்பா
பதினைந்தாம் திருப்படி ஏறி வந்தோம் கதியும் நீயே ஐயப்பா
பதினாறாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பரமனின் மைந்தா ஐயப்பா
2 ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2
பதினேழாம் திருப்படி ஏறி வந்தோம் நீ பக்தியை தந்திடு ஐயப்பா
பதினெட்டாம் திருப்படி ஏறி வந்தோம் திவ்ய தரிசனம் தருவாய் ஐயப்பா
2 ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2
No comments:
Post a Comment