வேல் வேல் வேல் வேல் வேலாயுதா
வேங்கை மர மானவரே வேலாயுதா
(வேல் வேல் வேலாயுதா)
வேல் வேல் வேல் வேல் வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதா
ஆறுமுகமானவரே வேலாயுதா
(வேல் வேல் வேலாயுதா)
திருச்செந்தில் அதிபனே வேலாயுதா
தெய்வ யானை மணாளனே வேலாயுதா
குன்றக்குடி குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளனே வேலாயுதா
(வேல் வேல் வேலாயுதா)
கந்தா உன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா
கருனை யோடு காத்தருள்வாய் வேலாயுதா
பால் குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப் பார்க்க ஆனந்தமே வேலாயுதா
(வேல் வேல் வேலாயுதா)
No comments:
Post a Comment