Thursday, December 16, 2010

சின்ன சின்ன பாலன்

சின்ன சின்ன பாலன்
சிவ பாலன் -
வண்ணமயில் வாகனன் வடிவேலன் - அந்த
வண்ணமயில் வாகனன் வடிவேலன்

எண்ண எண்ண இனிக்கும்
அவன் நாமம்
வள்ளி மணவாழனின் திருநாமம் - அந்த
வள்ளி மணவாழனின் திருநாமம்
                                                                                                (சின்ன)
கொள்ளை கொள்லும் சிந்தையை
அவன் நாமம்
குழந்தை வடிவேலனின் திருநாமம் - அந்த
குழந்தை வடிவேலனின் திருநாமம்

சஞ்சலங்கள் தீர்த்திடும்
அவன் நாமம்
சரவண பவனின் திருநாமம் - அந்த
சரவண பவனின் திருநாமம்
                                                                                                (சின்ன)
சிந்தை தனை கவர்ந்திடும்
அவன் நாமம்
சிங்கார வேலனின் திருநாமம் - அந்த
சிங்கார வேலனின் திருநாமம்

பாவ வினை போக்கிடும்
அவன் நாமம்
பால சுப்ரமண்யனின் திருநாமம் - அந்த
பால சுப்ரமண்யனின் திருநாமம்
                                                                                                (சின்ன)

No comments:

Post a Comment