Saturday, December 11, 2010

அச்சன் கோவில் இருப்பிடமா

அச்சன் கோவில் இருப்பிடமா
ஆரியங்காவ் இருப்பிடமா
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா
உன் வசதி எங்கே என்று சொல்லப்பா
பொன்னம்பல மேட்டிடமா முத்தய்யன் இருப்பிடமா
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா
உன் வசதி எங்கே என்று சொல்லப்பா


அச்சன் கோவில் இருப்பிடமா 
ஆரியங்காவ் இருப்பிடமா 
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா 
பொன்னம்பல மேட்டிடமா முத்தய்யன் இருப்பிடமா 
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா 


அங்கே வரோம் அங்கே வரோம் ஐயப்பா
2 ( சாமி சரணம் சரணம் சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா )2

குருநாதர் பாதம் தொட்டு இருமுடியும் தாங்கிகிட்டு
நேர்த்திக்கடன் தீர்க்க வரோம் ஐயப்பா
உந்தன் திருவடியை தஞ்சம் என்றோம் ஐயப்பா
ஐயனே முறையான விரதம் இருந்து
தலை சுமட்டில் நெய்யும் கொண்டு அபிஷேகம் செய்ய வரோம் ஐயப்பா
உனக்கு நெய்யபிஷேகம் செய்ய வரோம் ஐயப்பா
சேத்திரம் பல கடந்து வந்தோமப்பா
அச்சன் கோவில் அரசே ...... சரணம் ஐயப்பா
2 ( சேத்திரம் பல கடந்து வந்தோமப்பா
பெரிய பாதை தொடக்கம் எரிமேலி வந்ததப்பா )2


2  (சாமி சரணம் சரணம் சரணம் ஐயப்பா 
ஐயப்பா சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா ) 2

அச்சன் கோவில் இருப்பிடமா 
ஆரியங்காவ் இருப்பிடமா 
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா 
பொன்னம்பல மேட்டிடமா முத்தய்யன் இருப்பிடமா 
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா

அங்கே வரோம் அங்கே வரோம் ஐயப்பா 

சாமி திந்தக திந்தக திந்தக ...........
ஐயப்ப திந்தக திந்தக திந்தக ........

உச்சமெல்லாம் பரந்துபோச்சி வேறு வானம் கடந்துபோச்சி 
வாவரையும் சாஷ்தாவையும் தொழுகிறோம் 
ஐயப்பா நீண்ட நெடிய காட்டு வழியில் வருகிறோம் 
கண் துறந்து பார்க்கணுமே  எங்கள் நிலை உயரணுமே 
பதினெட்டாம் படி ஏற அருளனுமே ...
எங்கள் சந்ததியே உன் அடிமை ஆகணுமே 
எங்கெங்கு இருந்தாலும் வருவோமப்பா 
ஐயப்பா......
எரிமேலி சாஸ்தாவே...... சரணம் ஐயப்பா..
௨(எங்கே அழைத்தாலும் வருவோமப்பா 
அங்கேயும் இங்கேயும் நீதானப்பா ) 2

2 (சாமி சரணம் சரணம் சரணம் ஐயப்பா 
ஐயப்பா சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா )2

ஐயா உன் சன்னதிக்கு நம்பி வந்தோம் மணிகண்டனே 
இக்கணமே வந்தருள்வாய் ஐயப்பா
பலஸ்தலமே நீயிருக்க எம்மனமெனும் ஆலயமே
நீ வருவாய் எனத் தெரிந்தேன் ஐயப்பா 
சரணம் என்றால் நீ வருவது மெய்யப்பா 

ஸ்வாமியே ஐயப்போ.... 
ஐயப்போ ஸ்வாமியே ....   
ஸ்வாமியே ஐயப்போ.... 
ஐயப்போ ஸ்வாமியே ....   
ஸ்வாமியே ஐயப்போ.... 
ஐயப்போ ஸ்வாமியே ....   


ஸ்வாமியே சரணம் ஐயப்போ.............

No comments:

Post a Comment