சபரி மலை வாழும் எங்கள்
தலைவனுக்கு மங்களம்
தவ முனிவர் வணங்கும்
அந்த சந்நிதிக்கு மங்களம்
இப முகவன் முருகோனுக்கும்
இளையோனுக்கும் மங்களம்
இன்ப மெல்லாம் தந்தருளும்
இறைவனுக்கு மங்களம்
புவி மிசையே பவனி வரும்
புனிதனுக்கும் மங்களம்
புவி மயங்கும் மோகினியாள்
புதல்வனுக்கு மங்களம்
பக்தி மலை ஏறுகின்ற
பக்தருக்கு மங்களம்
பகவான் நாமம் கூறுகின்ற
அனைவருக்கும் மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்
மங்களம் மங்களம் ஜெய மங்களம்
No comments:
Post a Comment