Thursday, December 16, 2010

வர வேண்டும்... வர வேண்டும்...



வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்
தர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி! 

(வர வேண்டும்)

பரம் என்று உனை அடைந்தேன்
ஒரு வரம் தா – என்றன்
சிரம் தனில் பதம் பதித்து
திரு வரம் தா! 

(வர வேண்டும்)

திருவடி நினை வொன்றே
நொடி தொறும் வேண்டும் – உன்
நினைவினில் தினம் திளைத்து
மகிழ் வரம் வேண்டும்!

மறுபடி மறுபடி 
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!

(வர வேண்டும்)


2 comments:

  1. என்னுடைய சில பாடல்களை எனக்கு தெரிவிக்காமல் இங்கே இட்டிருப்பதை காண்கிறேன். தயவு செய்து அவற்றை உடனடியாக நீக்கி விடவும். பிறருடைய பாடல்களை இடும்போது, எழுதியவர் பெயர் தெரியும் பட்சத்தில், அவர் பெயரையும், வலைப்பூ முகவரியையும் தர வேண்டும். அப்படியும் செய்யவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரால் வலைப்பூவை வைத்துக் கொண்டு இந்த மாதிரி காரியங்களை செய்யாதீர்கள். நன்றி.

    --கவிநயா

    ReplyDelete
  2. sry kavinaya ... ennudaya own usekaaka mattume indha valai poo.. indha website yarukkum theriyadhu.. u dont feel . next time song ezhuthina neengka sonnadhu pola type pandren. thangkalin varukaiku mikka nandri Kavinaya

    ReplyDelete