Thursday, December 16, 2010

பொன்னான தெய்வமே

பொன்னான தெய்வமே
எந்நாளும் எங்களை - காத்திட
வேண்டுமப்பா - ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா

எரிமேலி சாஸ்தாவே
எங்கள் குலதெய்வமே - எந்நாளும்
நீயே துணை - ஐயப்பா
எந்நாளும் நீயே துணை

                                                                                (பொன்)
நெற்றியிலே திருரீரும்
நெஞ்சத்திலே பக்தியும் - நிறைந்தோடி
வாரோமப்பா - ஐயப்பா
நிறைந்தோடி வாரோமப்பா

பொய் ஏதும் பெசாமல்
மெய் பேசி வருவோம் - காத்திட
வேண்டுமப்பா - ஐயப்பா
காத்திட வேண்டுமப்பா

                                                                                 (பொன்)
   
   சாமி திந்தகதோம் - ஐயப்ப திந்தகதோம்
   ஐயப்ப திந்தகதோம் - சாமி திந்தகதோம்

   சாமி சரணமே - ஐயப்ப சரணமே
   ஐயப்ப சரணமே - சாமி சரணமே

ஓயாமல் ஒழியாமல்
உன் புகழ் பாடவே - ஓடோடி
வாரோமப்பா - ஐயப்பா
ஓடோடி வாரோமப்பா

                                                                                 (பொன்)

இருமுடி தாங்கியே
கரிமலை ஏறியே
விரைந்தோடி வாரோமப்பா - ஐயப்பா
விரைந்தோடி வாரோமப்பா

பம்பா நதிக் கரையில்
பக்குவமாய் நீராடி
பாய்ந்தோடி வாரோமப்பா - ஐயப்பா
பாய்ந்தோடி வாரோமப்பா
                                                                                 (பொன்)

No comments:

Post a Comment